search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு கலப்படம்"

    • உணவுப் பாதுகாப்புத்துறையினர் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக இணையதளம் மற்றும் செயலி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
    • TN-FOOD SAFETY DEPARTMENT என்ற பெயரில் உள்ள இந்த செயலியை, பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    உணவுப் பாதுகாப்புத்துறையினர் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக இணையதளம் மற்றும் செயலி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

    உணவுப் பாதுகாப்பு தொடர்பான குறை, புகார்களை உணவுப் பாதுகாப்பு துறையினருக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பிரத்யேக செயலியை வடிவமைத்துள்ளது. TN-FOOD SAFETY DEPARTMENT என்ற பெயரில் உள்ள இந்த செயலியை, பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் உணவு கலப்படம் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, திருமணம் உள்ள விழா நாட்களில், மீதமாகும் உணவை தானம் செய்வது குறித்த தகவலை பதிவு செய்வதற்கான தளங்கள் உள்ளன.

    • தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.
    • உணவு கலப்படம் மற்றும் உணவு கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வீரசோழபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் தனியார் கல்லூரி இணைந்து உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன், அன்புபழனி, இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பாஸ்கரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள், அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்தும், உணவு கலப்படம் மற்றும் உணவு கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து உணவு பாதுகாப்பு குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள் பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் துணை முதல்வர் சுரேஷ் நன்றி கூறினார்.

    ×